சானியா மிர்சாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது : சமுக வலைதளத்தில் கணவர் சோயிப் மாலிக் பதிவு

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சானியா மிர்சாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது : சமுக வலைதளத்தில் கணவர் சோயிப் மாலிக் பதிவு
Published on

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் - சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், 31 வயதாகும் சானியா மிர்சாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் அவரின் கணவர் சோயிப் மாலிக், சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தம்பதியருக்கு ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா துறையினரின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com