மீண்டும் களமிறங்கும் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின்..

மீண்டும் களமிறங்கும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்..
x

இன்டர்நேஷனல் மாஸ்டர் லீக் டி20 தொடரில், முன்னாள் இந்திய ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் மீண்டும் களமிறங்கவுள்ளார். ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் மாஸ்டர் லீக் டி20 தொடர், வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்திய அணிக்கு கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் களமிறங்கவுள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக, நீண்ட இடைவேளைக்கு பின் சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்