அடையாள அட்டையை கேட்ட பாதுகாவலருக்கு டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அளித்த மரியாதை பாராட்டுக்குரியது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் போது ரோஜர் பெடரை வழிமறித்த பாதுகாவலர் ஒருவர் அடையாள அட்டையை கேட்டார். அதற்கு ஃபெடரர், தனது உதவியாளரை அழைத்து அடையாள அட்டையை காண்பித்த பிறகே அரங்கின் உள்ளே சென்றார். ஃபெடரரின் செயலால் அவர் மீதான மரியாதை அதிகரித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள சச்சின், பாதுகாவலரும் தனது பணியை சரியாக செய்தததாகவும் பாராட்டு தெரிவித்தார்.