மீண்டும் ஆஸி., ஓபன் சாம்பியன் ஆவாரா சபலென்கா?

x

ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை சபலென்கா தக்கவைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டு முறை சாம்பியனான சபலென்கா, பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸை எதிர்கொள்கிறார். ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ந்து 20 போட்டிகளை வென்று வீறுநடை போட்டு வரும் சபலென்கா, மீண்டும் கோப்பையை ஏந்துவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம், அரையிறுதியில் முன்னணி வீராங்கனை இகாவை சாய்த்த மேடிசன், சப்லென்காவிற்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியனாக உருவாகலாம் எனவும் டென்னிஸ் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்