எஸ்.ஏ டி20 லீக் - 20 ஓவர்களையும் ஸ்பின்னர்களே வீசிய விநோதம்
தென் ஆப்பிரிக்க டி20 லீக் போட்டியில் 20 ஓவர்களையும் ஸ்பின்னர்களே வீசிய வினோத சம்பவம் அரங்கேறியது. பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் (Pretoria Capitals) அணிக்கு எதிரானப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் (Paarl Royals) அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. பார்ல் ராயல்ஸ் வீரர் ஜோ ரூட் (JOE ROOT) 78 ரன்கள் அடித்தார். அடுத்து ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வைத்தே வீசி, வெற்றி கண்டது.
Next Story

