டெஸ்ட்-ல் இருந்து ரோகித் ஓய்வு - இந்திய அணியின் புதிய கேப்டன் யார் தெரியுமா?

x

Indian Test Cricket | டெஸ்ட்-ல் இருந்து ரோகித் ஓய்வு - இந்திய அணியின் புதிய கேப்டன் யார் தெரியுமா?

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனா இருந்து வந்த ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியில ஓய்வு பெறுவதா சமீபத்துல அறிவிக்க, அடுத்த கேப்டன் யார்னு கேள்வி எழுந்துச்சி...

ஜஸ்ப்ரிட் பும்ரா FITNESS பிரச்சினை வரும் என்பதால, அவர் மீண்டும் கேப்டனாக மாட்டார்னு கிரிக்கெட் வட்டாரத்துல பேசிட்டு இருந்தாங்க...

கோலிகிட்ட திருப்பியும் கேப்டன்ஷிப் போகுமானு கேள்வி எழ, அவர் ஓய்வு அறிவிக்கபோறதா தகவல் சுத்திட்டு வருது.

இப்படி இருக்க, இந்திய டெஸ்ட் டீமோட கேப்டனா சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதாவும், எதிர்கால திட்டமிடல் குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கரை நேர்ல சந்திச்சி ஆலோசனை நடத்துனதாவும் தகவல் போயிட்டு இருக்கு.

இப்படி இருக்க, இந்த மாத இறுதியில சுப்மன் கில் கேப்டனா அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதா கிரிக்கெட் வட்டாரத்துல சொல்லிட்டு இருக்காங்க..

ரிஷப் பண்ட் துணை கேப்டனா நியமிக்கப்படலாம்னு சொல்லப்படுது...


Next Story

மேலும் செய்திகள்