Richa Ghosh | மாஸ் காட்டிய ரிச்சா கோஷ் - மேற்கு வங்கம் வந்ததும் மறக்கவே முடியாத பரிசு கொடுத்த மம்தா

x

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய ரிச்சா கோஷை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவுரவித்திருக்கிறார். வா மகளே நீ இந்திய பெண்களின் நம்பிக்கை, மேற்கு வங்கத்தின் எதிர்காலம் என தட்டி கொடுத்த மம்தா பானர்ஜி, ரிச்சா கோஷிற்கு, டிஎஸ்பி பதவிக்கான உத்தரவை நேரில் வழங்கி சிறப்பித்துள்ளார்... உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 34 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார் ரிச்சா கோஷ். அதை என்றும் நிலைத்து நிற்கும் வரலாறாக மாற்ற, அவரின் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு லட்சம் கணக்கு வைத்து 34 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது மேற்கு வங்க அரசு... கூடவே தங்க பேட், தங்க பந்து, அந்த மாநிலத்தின் உயரிய விருதான பங்கா பூஷன் விருதையும் வழங்கி பெருமை படுத்தியுள்ளனர்... இந்த விழாவில், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலி, முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் போது மகிழ்ச்சியில் இருந்த மம்தா பானர்ஜி,சிறப்பழைப்பாளர் ஒருவருக்கு, தன் கழுத்தில் சுற்றியிருந்த ஸ்கார்ப்பை கொடுத்து, மகிழ்ச்சி அடைந்தார்...


Next Story

மேலும் செய்திகள்