RCB கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் அதிர்ச்சி

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி வீரர்கள், வெற்றி கொண்டாட்டத்தில் எதிரணி வீரர்களுடன் கைகுலுக்க தாமதம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே, முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாஹன் உள்ளிட்டோர் பெங்களூரு அணிக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஐபிஎல் FAIR PLAY அவார்ட்ஸ் பட்டியலில், பெங்களூரு அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. 14 போட்டிகளில் 133 புள்ளிகளுடன் பெங்களூரு அணி கடைசி இடத்தில் உள்ளது. இதன்மூலம் பெங்களூரு அணி மைதானத்தில் விளையாட்டின் மரபை மீறியது உறுதி செய்யப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com