டெல்லியை சிதைத்து பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறிய RCB
ஐபிஎல் 46வது லீக் போட்டில டெல்லிய 6 விக்கெட் வித்தியாசத்துல சாச்சுருக்கு பெங்களூரு...
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்துல நடந்த இந்த போட்டில முதல்ல பேட்டிங் பண்ண டெல்லிக்கு அபிஷேக் போரல் Abishek Porel அதிரடி தொடக்கம் தந்தாரு....
11 பந்துல 28 ரன் அடிச்சு அவரு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கருண் நாயர் 4 ரன்னுக்கும், டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுன டூபிளஸ்ஸி du Plessis 22 ரன்னுக்கும் ஆட்டமிழந்தாங்க...
பேட்டிங்க்கு pitch கொஞ்சம் சவாலா இருந்ததால டெல்லி வீரர்கள் சீரான இடைவெளில விக்கெட்ட இழந்தாங்க...
நிதானமா ஆடுன கே.எல்.ராகுல் 41 ரன் எடுக்க, ஸ்டப்ஸ் Stubbs கடைசில பவுண்டரிகள் அடிச்சதால 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துச்சு டெல்லி...
அடுத்து 163 ரன்கள் இலக்க நோக்கி ஆடுன பெங்களூரு 30 ரன்னுக்குள்ள 3 விக்கெட்ட இழந்து தடுமாறுச்சு...
நாலாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த விராட் கோலியும் க்ருணல் பாண்டியாவும் Krunal Pandya நிலைச்சு நின்னு விளையாட இலக்க நோக்கி பயணிச்சுச்சு பெங்களூரு...
சிக்சர்கள பறக்கவிட்டு சிறப்பா விளையாடுன க்ருணல் பாண்டியா அரைசதம் அடிச்சு அசத்த, கோலியும் pitchக்கு ஏத்த மாதிரி நிதானமா ஆடி, அரைசதம் அடிச்சாரு,,.,
நாலாவது விக்கெட்டுக்கு 119 ரன் பார்ட்னர்ஷிப் அமைச்சாங்க கோலி-க்ருணல் ஜோடி....
கோலி 51 ரன்னுல ஆட்டமிழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் பவுண்டரிகள விரட்டி பட்டய கிளப்புனாரு...
19வது ஓவர்ல 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்த பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்துல அபார வெற்றி பெற்றுச்சு...
இந்த வெற்றி மூலமா away games-ல தொடர்ச்சியா ஆறு game ஜெயிச்ச முதல் அணினு சாதனை படைச்சுருக்க பெங்களூரு, புள்ளிப்பட்டியல்ல முதலிடத்திற்கும் முன்னேறி இருக்கு....
