``கடப்பாரை டீமுடா’’ - விஸ்வரூபம் எடுத்த RCB.. கதிகலங்கும் பிளேஆப் அணிகள்

x

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு, புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை உறுதி செய்தது. இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 18.4 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 230 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டாப்-2 இடத்தை உறுதி செய்த பெங்களூரு, கம்பீரமாக பிளே ஆப் சுற்றில் விளையாட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்