ரஞ்சி கோப்பை - அரையிறுதிக்கு தகுதிபெற்றது மும்பை

x

ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு மும்பை அணி தகுதிபெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மும்பை - அரியானா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 315 ரன்களும், அரியானா 301 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் மும்பை 339 ரன்கள் எடுத்த நிலையில், 354 ரன்கள் இலக்குடன் விளையாடிய அரியானா, 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை அணி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்