ரஞ்சி கோப்பை - தொடரில் இருந்து வெளியேறியது தமிழ்நாடு
ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில் விதர்பா அணியிடம் தோல்வியடைந்து, தமிழ்நாடு தொடரில் இருந்து வெளியேறியது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் விதர்பா 352 ரன்களும், தமிழ்நாடு 225 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 272 ரன்கள் சேர்த்த விதர்பா, தமிழ்நாட்டிற்கு 401 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு, 202 ரன்களுக்கு ஆட்டமிழந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் காலிறுதி சுற்றுடன் ரஞ்சி தொடரில் இருந்து தமிழ்நாடு வெளியேறி ஏமாற்றம் அளித்தது.
Next Story
