உள்ளே இறங்கும் `மக்கள் கேப்டன்’ - காத்திருக்கும் முரட்டு மேட்ச்
ஐ.பி.எல் தொடரில் இன்று 4வது லீக் போட்டி நடக்கிறது. ஸ்ரேயஷ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் இன்றைய தினம் பலப்பரீட்சை நடத்துகின்றன. சண்டிகரில் நடைபெறும் இந்த ஆட்டம், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. சந்திக்கும் முதல் போட்டியிலேயே, வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
