பட்டைய கிளப்பும் புரோ கபடி தொடர்... சாம்பியன் பட்டம் வெல்லுமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி தொடரின் 6வது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை முதல் சென்னையில் தொடங்குகிறது.
பட்டைய கிளப்பும் புரோ கபடி தொடர்... சாம்பியன் பட்டம் வெல்லுமா தமிழ் தலைவாஸ்?
Published on

`* புரோ கபடி தொடரின் 6வது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை முதல் சென்னையில் தொடங்குகிறது. 12 அணிகள் 2 பிரிவுகளாக போட்டியில் பங்கேற்கின்றன. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. கபடி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ள இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

* கபடியின் அடையாளமாக திகழும் தமிழ்நாட்டிற்கு இம்முறை பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்குகிறது.

* இம்முறை தமிழ் தலைவாஸ் அணியில் MANJEET CHILAR,JASVIR SINGH உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்கள் இடம்பெற்றுனர். இவர்களுடன் அணியின் தலைவனான அஜய் தாக்கூர் இணைந்திருப்பதால் இந்த தொடர் சரவெடியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

* தமிழ் தலைவாஸ் அணியில் பிரதாப், அருண் உள்ளிட்ட திறமையான இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 2 அர்ஜூனா விருது வென்ற வீரர்கள், உலகக் கோப்பையை வென்று தந்த வீரரும் தமிழ் தலைவாஸ் அணியில் இருப்பதால், இம்முறை தமிழ் தலைவாஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com