

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் , பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டன. இந்நிலையில் நடப்பு லீக் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி ARSENAL அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் மான்செஸ்டர் சிட்டி அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ARSENAL அணியை வீழ்த்தியது. போட்டி தொடங்கும் முன் இரு அணி வீரர்களும் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழப்புக்கு மண்டியிட்டு வருத்தத்தை பதிவு செய்தனர்.