வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு அபராதம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு ஐசிசி அபராதம் விதித்து உள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே கயானாவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், ரிவியூ எடுத்தபோது, நடுவரின் முடிவை பூரன் விமர்சித்தார். இந்நிலையில், போட்டிக் கட்டணத்தில் இருந்து பூரனுக்கு 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஐசிசி விதிகளை மீறியதால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com