பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற அவனி லெகாரா இந்திய வீராங்கனை அவனி லெகாரா 445 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் சீன வீராங்கனை 457 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இதையடுத்து அவனிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஏற்கெனவே 10 மீட்டர் ரைபிள் பிரிவில் அவனி தங்கம் வென்ற நிலையில், இது வருக்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும்.