பாண்டியாவின் அந்த செயல் தான் தோல்விக்கு காரணமா? - உச்சகட்ட கடுப்பில் பல்தான்ஸ்

x

ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் மும்பையை 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தியது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சொற்ப ரன்களுக்கு வெளியேறினாலும் மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடி காட்டினார். அவருடன் இணைந்து ஆடிய அபிஷேக் சர்மா சிக்சர்களைப் பறக்கவிட்டார். இருவரும் அரைசதம் கடந்த பிறகு ஆட்டமிழந்த நிலையில் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்ரம் - கிளாசென் ஜோடி மும்பை பவுலிங்கை நொறுக்கியது. கடைசி ஓவர்களில் கிளாசென் வாணவேடிக்கை நிகழ்த்த 20 ஓவர்களில் ஹைதராபாத் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. 7 சிக்சர்களைப் பறக்கவிட்டு கிளாசென் 80 ரன்களுடனும் மார்க்ரம் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர்ந்து 278 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் ரோகித் சர்மா - இஷான் கிஷான் தொடக்க ஜோடி சிக்சர்களைப் பறக்கவிட்டு அதிரடி தொடக்கம் தந்தது. இஷான் 36 ரன்களும் ரோகித் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, திலக் வர்மா சிக்சர் மழை பொழிந்தார். இதனால் மும்பையின் ரன் வேகம் அதிகரித்தது. மறுமுனையில் நமன்தீர் 30 ரன்களுக்கு கேட்ச் ஆனார். 6 சிக்சர்களைப் பறக்கவிட்ட திலக் வர்மா 64 ரன்களில் ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸிடம் ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களில் மும்பையின் ரன் வேகம் சற்று குறைந்தது. நிதானமாக ஆடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். கடைசி ஓவர்களில் டிம் டேவிட் அதிரடி காட்டினாலும் தேவைப்படும் ரன்ரேட் அதிகமாக இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுக்க, 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்