ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டி - பதக்கத்தை நெருங்கும் பி.வி. சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்.
ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டி - பதக்கத்தை நெருங்கும் பி.வி. சிந்து
Published on
ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த முன்னணி வீராங்கனை யமகுச்சியுடன், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மோதினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியின் முதல் செட்டில், ஆக்ரோஷமான ஆட்டத்தை சிந்து வெளிப்படுத்தினார். தொடர் ஷாட்களால், எதிரணி வீராங்கனை யமகுச்சியை, முதல் செட்டில் சிந்து திணறடித்தார். இதன்மூலம், முதல் செட்டை 21-க்கு 13 என்ற கணக்கில் சிந்து தனதாக்கினார். தொடர்ந்து நடந்த 2-வது செட்டில் முதலில் பின் தங்கியிருந்த யமகுச்சி, பின்னர் சுதாரித்து ஆடி முன்னிலை பெற்றார். பரபரப்பாக நடந்த 2-வது செட்டை 22-க்கு 20 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து, போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள்ளும் நுழைந்தார். இந்நிலையில் அரையிறுதியில், உலகின் நம்பர் ஒன் இடத்தில் உள்ள சீன தைபே வீராங்கனை தை ஸூ யிங்குடன் சிந்து மோத உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com