பிறந்தநாளை கொண்டாடிய நோவக் ஜோகோவிச்
செர்பியாவை சேர்ந்த உலகப்புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஜெனிவா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அரையிறுதிக்கு ஜோகோவிச் முன்னேறிய நிலையில், அவரிடம் பிறந்தநாள் கேக் வழங்கி போட்டி அமைப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Next Story
