TNPL' தொடரில் திருச்சியை ஊதி தள்ளி.. மரண மாஸ் காட்டிய நெல்லை

x

9 வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. கோவையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. நெல்லை தரப்பில் கடைசி ஓவரை வீசிய சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணி 19.2 ஓவர்களில், 162 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்