அடுத்த மாதம் ஒலிம்பிக்.. இப்போதே எதிர்பார்ப்பை எகிற வைத்த நீரஜின் சம்பவம்

ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் தனது மூன்றாவது முயற்சியில் 85 புள்ளி 97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியெறிந்து தங்கப் பதக்கத்தை நீரஜ் சோப்ரா வசப்படுத்தினார். இந்த தொடரில் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். போட்டியில் பின்லாந்து வீரர் டோனி கெரானன் வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு பின்லாந்து வீரர் ஒலிவர் ஹெலாண்டர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். அடுத்த மாதம் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாக நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருப்பது அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது நினைவுகூரத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com