இந்தியாவின் மகன் நீரஜ் சோப்ரா..பெற்றோர் பெருமிதம்

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டியெறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்தியாவின் மகன் என அவரது பெற்றோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவரது தந்தை சதீஷ்குமார், மிகப்பெரிய சாதனையை நீரஜ் சோப்ரா நிகழ்த்தி இருப்பதாகக் கூறினார். இதேபோல் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவரது தாய் சரோஜ் தேவி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீரஜ் சோப்ரா பெருமை தேடித்தந்து இருப்பதாகக் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com