தேசிய விளையாட்டு விருதுகள் 2020 - முதல்முறையாக வீடியோ கான்பிரன்சிங்கில் விருதுகள்

தேசிய விளையாட்டு விருதுகள் 2020 முதல் முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று நடைபெற்றது.
தேசிய விளையாட்டு விருதுகள் 2020 - முதல்முறையாக வீடியோ கான்பிரன்சிங்கில் விருதுகள்
Published on

மெய்நிகர் வடிவத்தில், இந்தியாவின் குடியரசுத் தலைவர் வீட்டிலிருந்து , வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டார். இதேபோல மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு மற்றும் பிற பிரமுகர்கள் விஜியன் பவனில் இருந்து கலந்துகொண்டனர்.

மொத்தம் ஏழு பிரிவுகளில் 74 விருதுகள் வழங்கப்பட்டன. விருது வென்ற65 பேர் பல்வேறு இடங்களில் இருந்து விழாவில் கலந்துகொண்டனர். இவர்களில், தமிழக வீர‌ர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் வீர‌ர்கள், ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, உள்ளிட்டோரும் அடக்கம். தமிழகத்தின் பாரா ஒலிம்பிக் பயிற்சியாளர், ஜெய ரஞ்சித் குமாருக்கு, தயான் சந்த் விருது வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தப்படுதல், , உடல்நலக்குறைவு அல்லது நாட்டில் இல்லை போன்ற பல காரணங்களால் ஒன்பது விருதாளர்கள் கலந்து கொள்ள வில்லை.

"விளையாட்டு வீரர்களின் சாதனைகளை கொண்டாடும் நாள்" - பிரதமர் மோடி

தேசிய விளையாட்டு தினம், விளையாட்டு வீரர்களின் சாதனைகளை கொண்டாடும் நாள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது டுவிட்டர் பதிவில், இந்த நாளில் மேஜர் தயான் சந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், இந்தியாவில் விளையாட்டுகளை பிரபலப்படுத்தவும், விளையாட்டு திறமைகளை ஆதரிக்கவும் இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். அனைவரும் உடற்பயிற்சி பயிற்சிகளை அன்றாட வழக்கமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com