ஊட்டியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில், இறுதி போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.வயது அடிப்படையில் 8 பிரிவுகளாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் டெல்லி அணி வெற்றி பெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவில், இறுதி போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி வீரர்களுக்கு இந்திய இறகு பந்து சங்க செயலாளர் அசரஃப் பரிசுகளை வழங்கினார்.