ஆண்டுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்ற மும்பை

ஆண்டுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்ற மும்பை
Published on

27 ஆண்டுகளுக்குப் பிறகு இரானி கோப்பையை மும்பை வென்றுள்ளது. லக்னோவில் நடைபெற்ற இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 537 ரன்களும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 416 ரன்களும் குவித்தன. 2வது இன்னிங்சில் மும்பை 8 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தபோது கடைசி நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதனால் போட்டி டிரா ஆனது. எனினும் முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையின் அடிப்படையில் 15வது முறையாக இரானி கோப்பையை மும்பை வென்றது.

X

Thanthi TV
www.thanthitv.com