ஐதராபாத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 41வது ஐபிஎல் லீக் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்ரிக் கிளாசன் 71 ரன்கள் எடுத்தார். மும்பை அணியில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
Next Story
