டெல்லியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை
ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
Next Story

