``என்னுடைய வெற்றி பார்முலா'' - முதல்முறை மனம் திறந்த தோனி

x

சின்ன சின்ன பழக்கங்கள்தான் வாழ்க்கையில் முன்னேற முக்கியப் பங்கு வகிக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முன்பெல்லாம் விளையாட்டு ஒரு கெரியராகப் (CAREER)பார்க்கப்படவில்லை என்றும், படித்து வேலைக்கு செல்வதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். தனது தந்தை மிகவும் ஒழுக்கமானவர் எனக் கூறிய தோனி, நற்பண்புகளை தனது தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். நர்சரி முதல் 12ம் வகுப்பு வரை,, தான் பள்ளிக்கு ஒருபோதும் தாமதமாக சென்றதில்லை என்றும் தோனி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்