டி20 போட்டியில் அதிக ரன்கள் - ஜிம்பாப்வே உலக சாதனை

டி20 போட்டியில் அதிக ரன்கள் - ஜிம்பாப்வே உலக சாதனை
Published on
• சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணி என ஜிம்பாப்வே உலக சாதனை படைத்துள்ளது. டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் காம்பியாவிற்கு எதிரானப் போட்டியில் ஜிம்பாப்வே 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்திருந்த நேபாளத்தின் 314 ரன்கள் சாதனையை முறியடித்து ஜிம்பாப்வே புதிய உலக சாதனை படைத்தது. ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா, வெறும் 43 பந்துகளில் 133 ரன்கள் விளாசி அதகளப்படுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com