Mohammed Siraj | Viratkohli | Viral Photo | சிராஜ் வீட்டில் அந்த ஒரு Frame.. உருகிய கோலி ரசிகர்கள்
சிராஜ் வீட்டில் அந்த ஒரு Frame.. நெஞ்சம் உருகிய கோலி ரசிகர்கள்
கோலி மீதான பாசம் - ஜெர்ஸியை வீட்டில் ஃபிரேம் போட்டு மாட்டியுள்ள சிராஜ்
டெஸ்ட் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி கடைசியாக அணிந்து விளையாடிய ஜெர்ஸி, பவுலர் முகமது சிராஜின் வீட்டில் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டு இருப்பது கவனம் பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடினார். அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் சிட்னி டெஸ்ட்டில் கோலி அணிந்த ஜெர்ஸியை, முகமது சிராஜ் தனது இல்லத்தில் ஃபிரேம் போட்டு மாட்டி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கோலி மீது சிராஜ் வைத்திருக்கும் பாசத்தை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
Next Story
