Mohammed Shami | ``இதுக்கு மட்டும் எப்படி செட்டாகாம போவேன்?'' - அஜித் அகர்கரை வச்சு செய்த ஷமி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரை கடுமையாக சாடியுள்ளார். ஷமியின் உடற்தகுதி குறித்த புதிய விவரங்கள் இல்லாததால் அணியில் அவர் இடம் பெறவில்லை என்று அஜித் அகர்கர் கூறியிருந்தார். இந்நிலையில், இந்திய அணி உடற்தகுதிக்காக தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று ஷமி தெரிவித்துள்ளார். தற்போது ரஞ்சி போட்டியில் விளையாட உள்ள அவர், ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஏன் விளையாட முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story
