ஆசிய தடகள போட்டியில் பதக்க வேட்டை - இந்தியாவிற்கு 8வது தங்கம்

x

Heptathlon | Athlete | India | ஆசிய தடகள போட்டியில் பதக்க வேட்டை - இந்தியாவிற்கு 8வது தங்கம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவுல நடந்துட்டு வர, இரண்டாவது நாள்லயும் இந்தியா ஆதிக்கம் செலுத்துச்சி..

2 நாளா நடைபெற்ற ஹெப்டதலான் Heptathlon போட்டியில இந்தியாவைச் சேர்ந்த நந்தினி அகசாரா Nandini Agasara தங்கம் வென்று அசத்துனாங்க.. 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உட்பட மொத்தம் 7 EVENT சேர்த்து 5,941 புள்ளிகளோட முதலிடம் பிடிச்சி அசத்துனாங்க.

மகளிர் உயரம் தாண்டுதல்ல பூஜா தங்கம் வென்று அசத்துனாங்க..

மகளிர் 3000 மீட்டர் STEEPLECHASE போட்டியில இந்தியாவோட பருல் சவுத்ரி அபாரமா செயல்பட்டு வெள்ளி வென்றாங்க.. மொத்தம் 9 நிமிசம் 12.46 செகன்ட்ல கடந்து அசத்துனாங்க..

ஏற்கனவே 10 ஆயிரம் மீட்டர்ல தங்கம் வென்ற குல்வீர் சிங், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்துலயும் தங்கம் வென்று இரட்டை தங்க நாயகனா அசத்துனாரு...

ஒட்டுமொத்தமா 2வது நாள் முடிவுல இந்தியா 8 தங்கம், 7 வெள்ளி உட்பட 18 பதக்கங்களோட இரண்டாவது இடத்துல நீடிக்குது.

சீனா 15 தங்கம் உட்பட 26 பதக்கங்களோட முதலிடத்துல நீடிக்குது.


Next Story

மேலும் செய்திகள்