ஆஸ்திரேலியா முன்னாள் பேட்ஸ்மேன் மாத்தியூ ஹைடனுக்கு அலைச்சறுக்கின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.46 வயதான மாத்தியூ ஹைடன் கடந்த சனிக்கிழமை தன் மகனுடன் குயின்ஸ்லாந்தில் அலைச்சறுக்கில் ஈடுபட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு கழுத்து மற்றும் முதுகு தண்டில் முறிவுகள் ஏற்பட்டுள்ளது.இதை அவரே தனது வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " எனது மகன் ஜோஷுடனான விளையாட்டு தோல்வி அடைந்தது.சில காலம் விளையாட்டிற்கு முடிவு .எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.