பாரா ஒலிம்பிக்கில் கலக்கிய 'தங்கமகன்' மாரியப்பன் தங்கவேலுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கத்தை வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விளையாட்டு துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் காலங்களில் பாராலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வென்று நம்பர் ஒன் நாடாக திகழும் என நம்பிக்கை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com