மலேசியா ஓபன் - பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து மற்றும் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்‑சிராக் ஜோடி மலேசியாவின் ஜுனாயிடி அரிப் மற்றும் (Junaidi Arif & Roy King Yap) ராய் கிங் யப் ஜோடியை 21க்கு - 18, 21க்கு ‑12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து ஜப்பானின் டோமோக்கா மியாசகி-ஐ(Tomoka Miyazaki) 21க்கு 8, 21க்கு 13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Next Story
