பேட்மிண்டன் போட்டியில் தங்கம் தங்கம் வென்றார் கிருஷ்ண நாகர்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட் மிண்டன் இறுதிச் சுற்றுப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த கிருஷ்ண நாகர் தங்கப்பதக்கம் வென்றார்.
பேட்மிண்டன் போட்டியில் தங்கம் தங்கம் வென்றார் கிருஷ்ண நாகர்
Published on
டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட் மிண்டன் இறுதிச் சுற்றுப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த கிருஷ்ண நாகர் தங்கப்பதக்கம் வென்றார். ஹாங்காங் வீரர் சூ மான் கையை எதிர்த்து அபாரமாக விளையாடிய அவர், 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார். இதனால், இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், இந்தியர்கள் பலருக்கு கிருஷ்ணா நாகர் உத்வேகமாக திகழ்வார் என்றும், தங்கப் பதக்கம் வென்று அவர் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளதாகவும் புகழாரம் சூட்டி உள்ளார்.டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று குவிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கப் பதக்கம் வென்று ஒவ்வொரு இந்தியரையும் கிருஷ்ணா நாகர் புன்னகைக்க வைத்து இருப்பதாகவும் கூறி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com