மிகப்பெரிய சாதனை படைத்த கோனேரு ஹம்பி
மகளிர் செஸ் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை கோனேரு ஹம்பி Koneru Humpy படைத்துள்ளார்.
ஜியார்ஜியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில் சீனாவின் சாங் யூக்சினை Song Yuxin கோனேரு ஹம்பி எதிர்கொண்டார்.
காலிறுதியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்க இந்த சுற்று டிராவில் முடிவடைந்தது. முடிவில் 1.5க்கு 0.5 என்ற புள்ளிக் கணக்கில் ஹம்பி வெற்றி பெற்றார்.
இதன்மூலம் FIDE மகளிர் செஸ் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற மிகப்பெரிய சாதனையை கோனேரு ஹம்பி படைத்துள்ளார்.
Next Story
