"விராட் கோலியை வீழ்த்துவதே இலக்கு" - CSK பவுலர் பரபரப்பு பேட்டி

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பை தொடரில், விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது இலக்கு என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான பவுலர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் மகீஷ் தீக்சனா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐபிஎல் தொடரில் விராட்கோலியின் விக்கெட்டை தன்னால் கைப்பற்ற முடியவில்லை என கூறியுள்ளார். மேலும், விராட் கோலியின் விக்கெட்டே தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com