Kohli | ICC Ranking | நம்பர் 1 அந்தஸ்தை இழந்த கோலி - ஷாக்கில் ரசிகர்கள்
நம்பர் -1 இடத்தை இழந்த விராட் கோலி
ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் 845 புள்ளிகளுடன் மீண்டும் இரண்டாவது முறையாக நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்துள்ளார்.சமீபமாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் விராட் கோலி, 795 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் 764 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீரரான ரோஹித் ஷர்மா 757 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு சரிந்தார். 5வது இடத்தில் 723 புள்ளிகளுடன் இந்திய வீரரான சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார்.
Next Story
