சிறுவனுடன் கலந்துரையாடி அறிவுரை வழங்கிய கோலி
டெல்லியில் ரஞ்சி கோப்பை போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட கோலி, சிறுவனுடன் கலந்துரையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம்பெற்றுள்ளது. இந்திய அணியில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என சிறுவன் கோலியிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த கோலி,, உன் தந்தை சொல்லி பயிற்சிக்கு செல்லக் கூடாது... நீயாக சீக்கிரம் எழுந்து பயிற்சிக்கு செல்ல வேண்டும் எனக் கூறினார். ஒருவர் ஒரு மணி நேரம் பயிற்சி செய்தால், நீ இரண்டு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும்... ஒருவர் சதம் அடித்தால், நீ இரட்டைச் சதம் அடிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
Next Story
