KL ராகுலை கழற்றிவிடும் லக்னோ.. ஆனந்த கண்ணீர் விடும் RCB ஃபேன்ஸ்
அடுத்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் கே.எல்.ராகுல் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் உள்ள நிலையில், அவர் மெகா ஏலத்தின்போது லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கே.எல்.ராகுலை பெங்களூரு அணி நிர்வாகம் வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அடுத்த ஐபிஎல் சீசனில் கேப்டனாக அவர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
