கிங் கோலி சாதனையை முறியடித்த.. பாகிஸ்தான் கேப்டன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், சதம் அடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், புதிய சாதனையை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், நேபாள அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. இதில், பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 131 பந்துகளில் 151 ரன்களை குவித்தார். இதன் மூலம் தான் விளையாடிய 102 இன்னிங்ஸ்களில் 19 சதங்களை குவித்து புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன் ஹசீம் அம்லா 104 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி - 124 இன்னிங்ஸ்களிலும்19 சதங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
