கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் அபார சதம் - ஆஸி., ஆதிக்கம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் (STEVEN SMITH) பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட்(TRAVIS HEAD) அரைசதம் கடந்தார். தொடர்ந்து உஸ்மான் கவாஜா(USMAN KHAWAJA) - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி பொறுப்பாக விளையாடியது. இருவரும் சதமடித்து அசத்திய நிலையில், முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 35வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
Next Story
