காலிறுதியில் 1 ரன்.. அரையிறுதியில் 2 ரன் - எதிர்பாராத ட்விஸ்ட்.. ஃபைனலுக்கு முன்னேறிய கேரளா

x

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதிபெற்று கேரளா வரலாறு படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கேரளா முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்த நிலையில், குஜராத் முதல் இன்னிங்சில் 455 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் கேரளா 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டம் ட்ராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்திருந்த விதிப்படி, கேரளா ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


Next Story

மேலும் செய்திகள்