Kabaddi Match | மாநில அளவிலான கபடி போட்டி - எதிர் அணிகளை பிரித்தெடுத்த கரூர் ஆண்கள், பெண்கள் அணி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் அணியும்,பெண்கள் அணியும் முதலிடம் பெற்று அசத்தியுள்ளனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த போட்டியில், மொத்தம் 44 கபடி அணிகள் கலந்து கொண்டன. முதலிடம் பெற்ற ஆண்கள் அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பெண்கள் அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
Next Story
