ஜூரல், ஜடேஜா அதிரடி சதம் - இந்தியா 286 ரன்கள் முன்னிலை

x

ஜூரல், ஜடேஜா அதிரடி சதம் - இந்தியா 286 ரன்கள் முன்னிலை

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 128 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன் எடுத்து, 286 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில், கே.எல்.ராகுல், ஆல் ரவுண்டர் ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஆகியோர்கள் சதம் விளாசியால் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துருவ் ஜூரல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்த ரவீந்திர ஜடேஜா , டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் பட்டியலில் தோனியை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தை பிடித்து புது சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்