Junior World Cup Hockey | சொந்த ஊரில் இந்தியா அதிர்ச்சி தோல்வி - சோகத்தில் ரசிகர்கள் சொன்ன வார்த்தை
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. சென்னை எழும்பூர்,மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜெர்மனியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. துவக்கத்தில் இருந்தே கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த ஜெர்மனி அணி சிறப்பாக விளையாடியது. ஆட்ட முடிவில் ஐந்துக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், ஜெர்மனி இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளது. வரும் டிசம்பர் 10ல், ஜெர்மனியும், ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Next Story
