Jemimah Rodrigues | ஆனந்த கண்ணீரில் மூழ்கிய ஜெமிமா.. ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஆட்டநாயகி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்ற நிலையில், நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். ஆட்ட நாயகி விருதை உணர்ச்சிப்பெருக்குடன் பெற்றபின் பேசிய ஜெமிமா, இதற்காக இறைவனுக்கும், தனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் உட்பட தன் மீது நம்பிக்கை கொண்டிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார். மூன்றாவது இடத்தில் விளையாடியது கனவு போல் இருந்ததாகவும், தனது நோக்கம் இந்தியாவுக்காக வெற்றி பெறுவதே என்றும் குறிப்பிட்டார்.
Next Story
