

2019 ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதை பும்ராவுக்கு பிசிசிஐ வழங்குகிறது. இந்திய அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்கு சி.கே நாயடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த அறிமுக வீரருக்கான விருதுக்கு மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.